டிசம்பர் -19 அன்று மாலை 5 மணியளவில் அபுதாபி தமுமுகவின் சார்பாக அபுதாபி காலிதியா இரத்த வங்கியில்  இரத்த தான முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமில் அபுதாபி வாழ் தமிழ் சகோதரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு இலவச இரத்ததானம் செய்தனர்.  இந்நிகழ்ச்சி அபுதாபி தமுமுக பொருளாளர் பரங்கிப்பேட்டை அபுல்ஹசன் தலைமையில் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் அபுதாபி தமிழ்ச்சங்க தலைவர் ரெஜினால்டு, அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் ஜனாப். ஷி.கி.சி. ஹமீது   மற்றும் இதர நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு கவுரவித்தனர். 

அபுதாபி மண்டல தமுமுக துணைச் செயலாளர் அடியற்கை கி .மி . சேக்தாவுது, மர்கஸ் பொறுப்பாளர் உஸ்மான் அலி மற்றும் அபுதாபி மண்டல மமக செயலாளர் அடியற்கை அல் அமீன், சிட்டி பொறுப்பாளர் ஆயங்குடி ஹபீபுல்லாஹ், பனியாஸ் கிளை செயலாளர் ஆத்தங்கரை நஜிமுதீன்ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தனர்.  


Who's Online

We have 29 guests and no members online