பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்க வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த பின்பும் இதுவரை இலவச பேருந்து பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த இலவச பஸ் பாஸ் மூலம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் பயிலும் ஏழை மாணவர்கள் பலர் தங்களது பள்ளிகளுக்குச் சிரமமின்றி சென்று வந்தனர். தற்போது இலவச பஸ் பாஸ் இல்லாத காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அதிக அளவு பேருந்துக் கட்டணத்தை செலவிட்டு வருகின்றனர்.


பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, பள்ளி மாணவர்கள் சீருடையுடன் இருந்தால் அவர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவுறுத்தி இருந்தாலும், பல்வேறு பேருந்துகளில் இலவச பஸ் பாஸை நடத்துநர்கள் மாணவர்களிடம் கேட்பதாக தகவல் வருகிறது.


கல்லூரி மாணவர்களுக்கு தனி சீருடை இல்லாத சூழலில் அவர்கள் தங்களது கல்லூரிப் பயணத்திற்கு அதிக அளவு தொகையை செலவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழலில் தினமும் கல்லூரிகளுக்குப் பயணித்து வருகின்றனர்.


எனவே, தமிழக அரசு மாணவர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சலுகை விலை பாஸ் ஆகியவற்றை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

வீடியோக்கள்

More Videos
Watch the video

ஊடகங்களில்

More Articles

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின்...

முஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச்...

கட்டுரைகள்

More Articles

சமுதாய கண்மணிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...

வரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...

ஆடியோ

More Articles