தமுமுக துபை  மண்டலம் சார்பாக,  துபை லத்திஃபா மருத்துவமனையில்  17-.02.-2017. வெள்ளியன்று மாபெரும் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. 

மண்டல தமுமுக செயலாளர் அதிரை சாகுல்  தலைமையில் நடைபெற்ற முகாமில் துபையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபரும் சமுக ஆர்வாளருமான சீனா தானாஅப்துல் காதர்,   அமீரக தமுமுக செயலாளர் அப்துல் ஹாதி,   தோப்புதுறை அப்துல் அமீத் முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்  துபை மண்டல தமுமுக.,வின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் மாற்றுமத சகோதரர்களும் அதிக அளவில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்து  சகோதரர்கள் கலந்துகொள்வதற்கான வாகன வசதிகளை சமுக ஆர்வளரும் தொழிலதிபருமான இளையான்குடி அபுதாஹீர்   செய்திருந்தார். சிறப்பாக நடைபெற்ற முகாமிற்கான ஆயத்தப்பணிகளை மமக மண்டல செயலாளர் கீழை ஜெய்னூல்.ஆபிதீன்,  மண்டல தமுமுக பொருளாளர் அடியற்கை ஷேக் தாவூத், மண்டல துணை செயலாளர்கள்  லால்பேட்டை அலி,  முகவை  அப்துல் ரஹ்மான், பொறையார் பர்ஜிஸ்,  மக்கள் தொடர் பாளர் திருச்சி பிலால்,  ஊடகதுறை செயலாளர் முத்துபேட்டை  பைசல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


Who's Online

We have 35 guests and no members online