பஹ்ரைன் த.மு.மு.,க சார்பில் கடந்த 24.2.17 அன்று பஹ்ரைன் சவுத் பார்க் ரெஸ்டெரென்ட் அரங்கில், சமூக நல்லிணக்க மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார்.

 மாலை 7:30 மணி முதல் இரவு 10:30 மணிவரை நடைபெற்ற இம்மாநாட்டில் அரங்கம் நிரம்பி வழியும் நிலையில் ஆண்களும், பெண்களுமாக திரளாக கலந்து கொண்டனர். மாணவர் ரசீம் புகாரி திருக்குர்ஆன் முழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மண்டல மக்கள் தொடர்பாளர் கொடிக்கால் பாளையம் முனவ்வர் ஜமான்  வரவேற்புரை நிகழ்தினார்.

 திருக்குர்ஆன் வசனத்துடன் துவங்கிய இம்மாநாட்டில் பஹ்ரைன் த.மு.மு.க தலைவர் முஹம்மது யூசுப் தலைமை தாங்கி உரையாற்றினார். மாநாட்டின் அவசியம் குறித்து தமுமுக மார்க்கப் பிரிவு செயலாளர் மவ்லவி ஷபீர் உலவி சிற்றுரையாற்றினார். பஹ்ரைன் மண்டல த.மு.மு.க வின் செயல்பாடுகள் குறித்து பஹ்ரைன் மண்டல துணை செயலாளர் ஆளூர் செய்யது அலி விவரித்தார்.

 அல் சாரா ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் தொழில் அதிபர் முகமது ஹுசைன் மாலிம் கலந்து கொண்டு த.மு.மு.க வின் மனிதநேய பணிகள் குறித்து பாராட்டு தெரிவித்து வாழ்த்து கூறி பேசினார். அவர் தனது உரையில் 2004 சுனாமி பேரழிவின் போது அருஞ்சேவையாற்றிய தமுமுக தொண்டர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.  

 பின்னர் சிறப்புரையாற்றிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக முஸ்லிம்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் சமூக நல்லிணக்கத்தை பல்வேறு வரலாற்று சான்றுகளுடன் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

இதன் தொடர்ச்சியாக  தமுமுக மேற்கொண்டுவரும் பல்வேறு சமூக நலப்பணிகளை பட்டியலிட்டு அனைவரும் தமுமுகவிற்கு ஆக்கமும்,  ஊக்கமும், ஆதரவும்,  ஒத்துழைப்பும், நல்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.  நிகழ்ச்சியை மண்டல செயலாளர் நிரவி டாக்டர் ஜகபர் அலி  தொகுத்து வழங்கினார். 

தமுமுக மாநில செயலாளர் பொறியாளர் சபியுல்லாஹ் கான், தமுமுக மாநில தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் மௌலவி பொதக்குடி எஸ்.கே. ஷம்சுதீன்  முன்னிலை வகித்தனர்.  

 இறுதியாக மண்டல தமுமுக துணை செயலாளர் ஆழியூர் தமிமுல் அன்சாரி  நன்றியுரை நிகழ்த்தினார்.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு கொண்ட வளைகுடா மண்டல  நிர்வாகிகள்  அனைவருக்கும் பஹ்ரைன் மண்டலம் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பஹ்ரைன் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் பங்கேற்று இரத்ததானம் செய்த த.மு.மு.க சகோதரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மண்டல மமக செயலாளர் பொதக்குடி ஹாஜா மைதீன்,  மண்டல பொருளாளர் ராஜகிரி ஹாரூன் ஹாசிம், தமுமுக துணை செயலாளர் பொறியாளர் ஷாஜஹான்,  தமுமுக துணை செயலாளர் பொதக்குடி சாகுல், முன்னாள் பொருளாளர் தேங்கை சிராஜ், முன்னாள் செயலாளர் கடம்பை ஜக்கரியா, அமீர், நிஜாமுத்தீன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

 


Who's Online

We have 27 guests and no members online