சமூகப் பொறுப்புடனும், சமுதாய அக்கறையுடனும் சமுதாய அமைப்புகளில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துவக்க காலம் முதலே ஊடகங்களில் சமுதாயத்திற்கு பயன் தரும் வகையில் தனது பங்களிப்பை திறம்பட செய்து வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக சூழ்நிலை தேவைகளை அறிந்து ஊடகப்பிரிவு மாநிலம் முழுதும் விரிவு படுத்தப்பட்டுள்ளது அதன் முதல் செயற்குழு கடந்த 26ம் தேதி, சென்னை கவிக்கோ அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

ஒரு சில மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்ட ஊடகப்பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ஊடகப்பிரிவின் மாநிலச் செயலாளர் உஸ்மான் கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமுமுக தலைவர் பேராசியர் ஜவாஹிருல்லா,  தமுமுக  பொதுச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, தமுமுக மாநில செயலாளர் ஹாஜா கனி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் அமீன், மமக தலைமை நிலையச் செயலாளர் எம். ஹூஸைன் கனி, மனிதவள மேம்பாட்டு அணியின் (விழி) மாநிலச் செயலாளர்  ஹூஸைன் பாஷா, மருத்துவ அணி மாநில பொருளாளர் கலீல் ரஹ்மான்,  ஊடகப்பிரிவின் மாநில பொருளாளர் ஓசூர் அல்தாப், ஊடகப்பிரிவின் மாநில துணைச் செயலாளர்கள் புளியங்குடி கமருத்தீன் மற்றும் மதுக்கூர் ஃபவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவின் நோக்கங்கள் என்ன? சமூக  ஊடகங்களை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு கையாளுவது? சமூக ஊடகங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?. உலக அளவில் சமூக ஊடகங்களால் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் என்னென்ன? போன்ற வினாக்களுக்கு பதில்களும் சில தலைப்புகளுக்கு செயல்முறை விளக்கங்களும் விரிவாக அளிக்கப்பட்டன. 

சைபர் க்ரைம் சட்டம் என்றால் என்ன? உலக அளவிலும் மற்றும் நம்நாட்டிலும் நடைமுறையில் உள்ள சைபர் சட்டங்களைப் பற்றிய முழு விபரங்கள் தெளிவாக விளக்கப்பட்டது.  இறுதியாக ஊடகப்பிரிவின் துணைச் செயலாளர் மதுக்கூர் பவாஸ் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

 


Who's Online

We have 30 guests and no members online