வளைகுடாவில் வாழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அன்பர்களின் சங்கமம் பஹ்ரைனில் கடந்த பிப்ரவரி 24 அன்று நடைபெற்றது.  இந்நிகழ்வில் பஹ்ரைன், குவைத்,ஐக்கியஅரபு அமீரகம், கத்தார்  மற்றும் சவுதி அரேபியா கிழக்கு, மத்திய மற்றும் அல்கஸீம் மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 30 நிர்வாகிகள் பங்கு கொண்டார்கள். 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மாநிலச்செயலாளர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான்,  தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் மவ்லவி எஸ்.கே.சம்சுதீன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 22 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக வளைகுடா நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடும் முதல் சங்கமமாக இது அமைந்தது.

கடல் கடந்து வாழ்ந்தாலும்கடந்த காலங்களில் வளைகுடாவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தமுமுக சகோதரர்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்து மண்டலம் வாரியாக விவரித்தார்கள். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் சென்று அங்கு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்ட தமிழர்களை தூதரகங்கள் மற்றும் அந்த நாடுகளின் பல்வேறு துறைகளை அணுகி அவர்களது பிரச்னைகளை தீர்த்துவைத்ததையும் விவரித்தார்கள்.

பணிக்கு வந்த இடத்தில் மரணமடைந்த தமிழக சகோதரர்களின் சடலங்களை தாயகத்திற்கு அனுப்புவது, அவர்களது வாரிசுகளுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுத்த நிகழ்வுகளையும் விவரித்தார்கள்.

வளைகுடா மண்டலங்களின் செயற் பாடுகளை பாராட்டிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்ற மண்டலங்களின் வழிமுறைகளை ஒருவருக்கொருவர் கடைப்பிடித்து இன்னும் எழுச்சியுடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நிர்வாகிகள் உத்வேகத்தோடு செயலாற்றும் உறுதியுடன் புறப்பட்டனர்.


Who's Online

We have 24 guests and no members online