கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 47).  இவர் கடந்த 9 வருடங்களாக சவூதி அரேபியா ரியாத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாயகம் வந்து குடும்பத்தினரை சந்தித்துவிட்டு மீண்டும் ரியாத் சென்ற அரிகிருஷ்ணன்,  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.  இது தொடர்பாக ரியாத்தில் அவருடன் பணியாற்றிய நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர்கள் கடலூர் மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக்தாவுத் அவர்களைத் தொடர்பு கொண்டனர். 

கடலூர் மாவட்ட தமுமுகவின் மூலம் மாநிலத் தலைமையை தொடர்பு கொண்டு ரியாத் மண்டல நிர்வாகிகள் மீமிசல் நூர் முஹம்மது மற்றும் அப்துல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள்  மூலம் அரிகிருஷ்ணன் பணியாற்றிய நிறுவனத்தையும் இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகள் செய்து   சடலத்தை தாயகம் கொண்டுவர ரியாத் மண்டல தமுமுக மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.  சென்னை வந்தடைந்த அரிகிருஷ்ணனின் சடலத்தை தமுமுக தலைமை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் கொண்டு சேர்க்கப்பட்டு அவரது மனைவி அருள்ஜோதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அருள் ஜோதியும் அவரது மகள் சுப்புலட்சுமி மற்றும் சதன் ஆகியோர் கண்ணீர் மல்க உடலைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.

 நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர்  தமுமுக மற்றும் ம.ம.க,வினர்  உடன் சென்றனர். நெல்லிக்குப்பம் தமுமுக நகர செயலாளர்அப்துல்ரஹிம் எம்.சி.,   மமக நகர செயலாளர் ஜாபர் அலி,  நகர துணை செயலாளர் பஷீர் அஹமது,  மமக பொருளாளர் தமுமுக துணை செயலாளர் ஹசன் அலி தவக்கல் ராஜா, தமாம் அஸ்ரப் அலி, மருத்துவ சேவை அணி செயலாளர் அஸ்ரப் அலி, மருத்துவ சேவை அணி துணை செயலாளர்  முஹம்மது ஹுசைன் ஹாஜி, நகர மாணவர் இந்தியா துணை செயலாளர்  பிரபாகரன், ஜமால், அன்வர், தன்வீர் கான், அசார், மற்றும் கடலூர் நகர  நிர்வாகிகள் நகர தமுமுக பொருளாளர் சம்சுதீன், நகர துணை செயலாளர் அஜிஸ் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் அப்துல் ரஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Who's Online

We have 25 guests and no members online