தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் கோரிக்கை கருத்தரங்கம் ஏன்? எதற்கு?

விடுதலைப் போரின் வீரிய வெளிப்பாடாக அடிமை இந்தியாவில் வெள்ளையர்கள் போதித்த ஆங்கிலக் கல்வியை முஸ்லிம் சமுதாயம் புறக்கணித்தது. அடிமை இந்தியாவில் ஆதிபத்தியத்தை அண்டிப்பிழைத்த சாதிபத்தியர்கள் சுதந்திர இந்தியாவில், முஸ்லிம் சமுதாயத்தை அனைத்துத் துறைகளிலும் புறக்கணித்தனர்.

1995ம் ஆண்டு, தேசிய சிறுபான்மையோர் ஆணையம், காவல்துறை, துணை ராணுவப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பற்றி ஆய்வு  செய்தது, முஸ்லிம்கள் இத்துறைகளில் பெரும் புறக்கணிப்பிற்கு ஆளாகி இருப்பதை வெளிப்படுத்தியது. ஆயினும் இந்நிலையை மாற்ற உருப்படியான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தான் இழந்த உரிமையை மீட்க;  இருக்கும் உரிமையைக் காக்க   என்ற எழுச்சிமிகு சமூகநீதி முழக்கத்தோடு தமுமுக 1995ம் ஆண்டு வீரியமாகக் களமிறங்கியது.

தமுமுக ஏற்றிய விழிப்புணர்வு என்னும் வெளிச்சத்தின் கீற்றுகள் கடைக்கோடி மனிதரின் கண்களைத் திறந்தது. உதிரிக் கற்களாய் உடைந்து கிடந்த சமுதாயத்தை, ஓங்கிய கோபுரமாய் உயர்த்திக் காட்டியது தமுமுகவின் சாதனை. (எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...)

1999 ஜூலை 4 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டி, மெரீனா புரட்சியை அன்றே தமுமுக தொடங்கி வைத்தது என்றால் மிகையன்று.

தஞ்சையில் ஜூலை 21, 2004ஆம் ஆண்டு தமுமுக நடத்திய மாபெரும் இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணியின் பயனாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் 2004 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அகில இந்திய அளவில் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தமுமுகவின் ஆதரவு திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு அளிக்கப்பட்டது. தமிழகம், புதுவையின் 40 இடங்களிலும் இக்கூட்டணி வென்றது. மத்தியில் திரு. மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது.

மார்ச் 9, 2005ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக, பொருளாதார நிலைகளை ஆய்வு செய்யக் கோரியது.

மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை நீதிபதி ரங்கநாத் 

மிஸ்ரா தலைமையில் மார்ச் 15, 2005 அன்று நியமித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

நவம்பர் 17, 2006 அன்று சச்சார் குழு அறிக்கை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கப்பட்டது.

நீதியரசர் ராஜிந்தர் சச்சார் குழுவின் அறிக்கையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை சமர்பிக்க வலியுறுத்தியும் மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக நடத்திய மாபெரும் பேரணியும், சமூக நீதி மாநாடும் இந்தியாவையே உலுக்கியது.

மிஸ்ரா ஆணையம் கூராய்வு செய்து மே 22, 2007 அன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இதற்கிடையே 2006ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முஸ்லிம் களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை திமுகவிடம் முன்வைத்து அதன் தலைமையிலான கூட்டணிக்கு தமுமுக ஆதரவு தெரிவித்து களப்பணிகளை மேற்கொண்டது. திமுக வெற்றி பெற்று கலைஞர் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது.

தமிழகத்தில் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக அரசால் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் கல்வி மற்றும் வேலைவாளிணிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

சச்சார் குழு மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.

பத்தாண்டுகள் கடந்த பின்னர் இந்த பரிந்துரைகள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்வதற்கே இந்த கருத்தரங்கம். அறிவார்ந்த அரசியல் தலைவர்கள் இந்த பிரச்சினையை அலசுகிறார்கள்.

முஸ்லிம்களுக்கான சமூக நீதியை மட்டுமல்ல, சமூகத்தையே புதைக்க ஆசைப்படுவோர் அதிகார ஆசனங்களில் இருக்கும் வேளையில், நமது தன்மான கோரிக்கைகளைத் தனித் துவத்தோடு முன்வைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அடுத்த தலைமுறைக்கும் அவலம் தொடராதிருக்க, நியாயத்தின் சீற்றங்களோடு, அறம் காக்கும் கூட்டம் அணி வகுக்கவும், சமுதாயப் பணி முடிக்கவும்தான் தமுமுக, மார்ச் 21, 2017 அன்று சென்னை காமராஜர் அரங்கில் மாபெரும் கோரிக்கை கருத்தரங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அநீதிக்கெதிராளிணி அணிவகுப்போம்! 

மார்ச் 21இல் சங்கமிப்போம்!!

இன்ஷாஅல்லாஹ்...


Who's Online

We have 31 guests and no members online