திருவள்ளுர் மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் 21.2.2017 அன்று குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமணன் சாவடியில்  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொது மக்களை, வெளியேற்றத் துடிக்கும் செயலை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சேக் தாவுத் தலைமை வகித்தார். குமணன்சாவயில் 100ஆண்டுகளுக்கும் மேல் வசித்துவரும் மக்களை அப்புறப்படுத்த துடிக்கும்  பகவதி தியேட்டர் உரிமையாளரையும், அவருக்கு  துணைபோகும் ஆட்சியாளர்களைக்  கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக அந்தப் பகுதியில் உள்ள வியா பாரிகள் மாலை  4 மணி முதல் 6 மணி வரை கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், மமக மாவட்ட செயலாளர் அஸ்காப், பொருளாளர் ஷேக் மொய்தீன், பூவை நகர மமக நகர செயலாளர் காஜா மைதீன், அமானுல்லாஹ், மாநில செயலாளர்.வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன், மாநி.செ.மனித.உ.அமைப்பை சேர்ந்த ஹாரூன் ரஷீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Who's Online

We have 21 guests and no members online