தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழகம் குவைத் மண்டலம் சார்பாக  10-03-2017 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தர்பியா என்ற நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு குவைத் மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மகராஜ் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குவைத் மண்டல இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை துணைச் செயலாளர் தாம்பரம் கௌஸ் பாஷா இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார். தமுமுக குவைத் மண்டல செயலாளர் லால்குடி ஜபருல்லாகான் வரவேற்புரை நிகழ்த்தினார்.  சவூதி கிழக்கு மண்டலத்திலிருந்து வருகை புரிந்த தமுமுக சவூதி கிழக்கு மண்டல துணை செயலாளர் மற்றும் தர்பிய பொருப்பாளருமான பொறியாளர் ஜக்கரியா தர்பியா நிகழ்வை நடத்தினார். தமுமுக மமக வளைகுடா ஒருங்கிணைப்பாளர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஹஜிரத் சம்சுதீன் நிறைவுரை ஆற்றினார்.இந்நிகழ்வில் தமுமுக-மமக குவைத் மண்டல 25 கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், செயற்குழு உறுபினர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.

 


Who's Online

We have 34 guests and no members online