சென்னைப் பல்கலைக்கழக பவளவிழாக் கலையரங்கில் 22.03.2017 அன்று ‘தமிழ்ப் புதுக்கவிதை - இஸ்லாமியர் பங்களிப்பு’ என்ற தலைப்பில் பேரா. முனைவர் ஜெ.ஹாஜாகனி ஆய்வுரை ஆற்றினார்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சையத் சலாஹுத்தீன் அறக்கட்டளை சார்பில் இந்தச் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழ்துறைத் தலைவர் முனைவர் ஒப்பில்லா மதிவாணன் தலைமை ஏற்க, பேரா. முனைவர் பழநி ஒருங்கிணைப்பில் பல் கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் இவ்வாய்வுரை நிகழ்ந்தது.

தமிழ்ப் புதுக்கவிதை வரலாறு, உலகளாவிய அளவில் புதுக்கவிதை தோன்றிய பின்னணி, தமிழிலக்கியத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் முஸ்லிம்கள் செய்துள்ள பங்களிப்புகள் ஆகியவற்றோடு தமிழ்ப் புதுக்கவிதைக்கு முஸ்லிம் கவிஞர்கள் செய்துள்ள தனித்துவ மிக்கப் பங்களிப்புகளை பேரா.ஹாஜாகனி தனதுரையில் குறிப்பிட்டார்.மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முனைவர் கம்பம் சாகுல் அமீது, சமூக ஆர்வலர் எஸ். ஆமீர்ஜவ்ஹர், ஐ. முபாரக், சமூகநீதி மாணவர் இயக்க மாநில நிர்வாகிகள், அரஃபாத், வழக்குரைஞர் பெரோஸ், இஸ்லாமிய இலக்கியக்கழகப் பொருளாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்பித்தனர்.

 


Who's Online

We have 53 guests and no members online