சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் 20.2.2017 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இது குறித்து மக்கள் உரிமை (மார்ச் 3-9) இதழில்  சொல்வதெல்லாம் உண்மை...? சுய பரிசோதனையால் நன்மை...! கொந்தளிக்க வைத்த ஜீ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பின்னணி என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. கணவர் மற்றும் அவரது வீட்டாரின் பெருங்கொடுமைகளுக்கு ஆளான ஒரு முஸ்லிம் பெண், லஷ்மி ராமகிருஷ்ணன் முன்பு அழுது முறையிடுவதும், அந்நிகழ்ச்சியில் பேசும் ஒரு வழக்குறைஞர் இஸ்லாமிய ஷரிஅத் சட்டம் குறித்து விரக்தி யூட்டும் விளக்கம் கொடுப்பதும், அதைத் தொடர்ந்து அப்பெண் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை எடுத்து விடுங்கள் அது என்னையும், என்போன்ற பெண்களையும் அநீதிக்குள்ளாக்குகிறது என்று அழுவதும் ஒளிபரப்பானது.இதற்குள் பல நுண்ணரசியல் ஒளிந்திருந்தாலும், தனியொரு பெண்ணின் பிரசசினையை ஷரிஅத் சட்டத்தின் பிரச்சிணையாக திசை திருப்பும் திட்டம், இணைந்திருந்தாலும், இதைவெறும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் அணுகி, பெண்ணியவாதிகள், முற்போக்காளர்கள் ஷரிஅத் சட்டம் என்ற தவறான நிலைக்குத் தள்ளிவிடக் கூடாது என்பதில் தமுமுக மிகவும் கவனத்தோடும் பொறுப்போடும் செயல்பட்டது. தலைவர் பேரா. ஜவாஹிருல்லாவின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட நிர்வாகிகள், அப்பெண்ணின் இல்லம் சென்று நடந்தவற்றை அதன் பின்னணியோடு அறிந்து மக்கள் உரிமையில் வெளியிட்டோம்.

 வழக்கறைஞர் தந்த விரக்தியளிக்கும் விளக்கமும், இஸ்லாமிய சட்டங்கள் குறித்த அறியாமையும், சில ஜமாஅத்கள் செய்த புறக்கணிப்பும் தான் தன்னை அந்நிலைக்குத் தள்ளி விட்டதாக அப்பெண் கூறினார்.

 இரு தரப்பிலும் விசாரணை

 (குலாஃ )என்ற இஸ்லாமிய பெண்களுக்கான மணவிலக்கு உரிமையையும், பொதுவாக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் தமுமுக சகோதர்கள் அப்பெண்ணிற்கு எடுத்துரைத்ததோடு, அப்பெண்ணிற்கு நியாயம் பெற்றுத்தரும் முயற்சியிலும் இறங்கினர்.

மார்க்கச் சட்டங்களின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைப் போக்கியதோடு மட்டும் நின்று விடாமல், அப்பெண்ணுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப் பெரு முயற்சியெடுத்த தமுமுகவினர், அவரது கணவர் வீட்டாருடன் பேசி, தமுமுக அலுவலகத்திற்கு வரவழைத்து, இருதரப்பாரிடமும் விசாரித்தனர்.

 4 பவுன் தங்க நகை

 இவ்விசாரணையின் போது, ‘தான் இன்னொரு திருமணத்திற்கு முயலவே இல்லை என்று மறுத்த அப்பெண்ணின் கணவர், இப்பெண்ணுடன் தான் மனந்திருந்தி வாழ்வதாகவும் வாக்களித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணோ, தான் பட்டக் கொடுமைகளை எடுத்துரைத்து, இத்தகைய நபருடன் நான் வாழமுடியாது, எனவே மணவிலக்கு (குலாஃ)செய்வதாக அறிவித்தார். இதை ஏற்று திருமணத்தை ரத்து செய்ய இருதரப்பும் ஒப்புதல் அளித்தது. மணமகளிடம் பெற்றுள்ள 4பவுன் நகையை, தமுமுகவினர் முன்னிலையில் பெண்ணிடம் ஒப்படைத்துவிட உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் அவரது தாயார், குழந்தை ஆகியோர் மட்டுமே வந்திருக்க, குற்றச்சாட்டுக்குள்ளானவரோ, ஏராளமானவேர்களைத் தனக்கு ஆதரவாக 35பெண்களையும்,15ஆண்களையும் தமுமுக அலுவலகத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனாலும் விசாரணையில் அப்பெண்ணின் பாதிப்புகள் உண்மை எனத் தெரிய வந்ததும் அவருக்கும் நிவாரணம் பெற்றுத்தரும் முயற்சியைத் தமுமுக எடுத்துள்ளது.

 

ஜீ தமிழ் தொகாவில் அப்பெண் அழுது புலம்பி விரத்தியில் பேசியதற்கும், மார்க்க விளக்கம் பெற்று, தனது உரிமைகளை அறிந்தபின் பேசியுள்ளதற்கும் ஏராள வேறுபாடுகள் உள்ளன. தமுமுக களமிறங்கியதன் விளைவாக பாதிப்புகளுக்குக் காரணம் ஷரிஅத் சட்டங்கல்ல ஷரிஅத் சட்டம் குறித்த  அறியாமையே என்பது வெளிப்பட்டுள்ளது.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் காணொளியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு நமது மக்கள் உரிமை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

 

Who's Online

We have 17 guests and 2 members online

  • ScroogeBus
  • ymegywu